லியாபியின் (LIAFI) தஞ்சை கிளை பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு, தஞ்சை பெசன்ட் அரங்கில், 25.5.2024 அன்று காலை 9:30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை கிளை, தலைவர்.எஸ். ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார், தஞ்சை கோட்டப்பொருளாளர், எஸ். ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார்,தஞ்சை கிளையின் செயலாளர், டி.ஆரோன்ராஜ் வரவேற்புரையாற்றினார். தஞ்சை கிளை பொருளாளர், கே.முரளி செல்வம் வரவு, செலவு கணக்கை சமர்ப்பித்தார், செயற்குழு உறுப்பினர், ஆர். வீரமணி, செயற்குழு உறுப்பினர், பி. ரகுநாதன்,எம்.எ. முருகையன், எல். குப்பு கண்ணன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
இதன் பின்பாக புதிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகிகளான: பொன்.காசிநாதன் தலைவராகவும்,டி. வசந்தராஜ் செயலாளராகவும்,வி. மகேந்திரன் பொருளாளராகவும், எம்.எ. முருகையன் செயற்குழு உறுப்பினராகவும், எல். இன்பசேகரன் செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் புதிய நிர்வாகிகளை, பழைய பொறுப்பாளர்களான: தலைவர், எஸ். ரவிச்சந்திரன், செயலாளர்,டி. ஆரோன்ராஜ், பொருளாளர்,கே. முரளிசெல்வம் ஆகியோர் தங்களது பொறுப்புகளை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க, புதிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், சுமார் 25 ஆண்டு காலம் பணிபுரிந்த முகவர்களையும், மற்றும் சாதனை செய்த முகவர்களையும், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக தஞ்சை கிளை பொருளாளர், கே.முரளிசெல்வம் நன்றியுரை ஆற்றினார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment