மீஞ்சூர் முதல் வள்ளூர் வரை சேதமாகிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொன்னேரி திருவெற்றியூர் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மீஞ்சூர் முதல் வள்ளூர் வரை சேதமாகிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொன்னேரி திருவெற்றியூர் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் முதல் வள்ளூர் வரை பொன்னேரி திருவெற்றியூர் சாலையானது கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சாலையானது சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறி இருந்தது மேலும் கனமழையின் போது சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி சாலை முற்றிலும் சேதமானது பொதுமக்களின் பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் என அனைவரும் சாலையை பார்வையிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியர் சுமார்17 கோடி நிதி ஒதுக்கி விரைந்து சாலையை சீரமைப்பதாக உறுதியளித்துச் சென்ற நிலையிலும் தற்போது வரை சாலையானது உரிய முறையில் சீரமைக்கப்படாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் சாலைகளில் தூசி பறந்து கண் பாதிப்பு மற்றும் சுவாசக்கார உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் பொதுமக்கள் உள்ளாகி வந்தனர்.
மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மேலூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்தும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் மறியலில் ஈடுபட்டனர் பின்னர் அவர்களிடம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சமரசம் மேற்கொண்டு சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment