செங்குன்றத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு 51 அடி உயரம் உள்ள ஸ்ரீ அம்பிகை சிலை, கருநிலை ஸ்தூபி, கோபுரம் மற்றும் ஆலய பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வருகின்ற ஜூன் மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவிற்கு வேத மந்திரங்கள் ஓத யாகசாலை பூஜையுடன் பந்தக்கால் நடப்பட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள ஸ்ரீ அங்காளம்மனுக்கு பாலஸ்தாபனம் நடைபெற்றது. இதில் விழா குழுவினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், கவுன்சிலர்கள், வியாபார பொதுமக்கள், காவல்துறையினர் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment