செங்குன்றம் காமராஜர் நகர் முத்துராமலிங்கம் தெருவில் உள்ள நேஷனல் லோட்டஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சென்னை செங்குன்றம் லயன்ஸ் சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை-நேஷனல் லோட்டஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் பொதுமக்களுக்கு இலவச கண்புரை பரிசோதனை முகாம் சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ஆனந்தசீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம் முகாமிற்கு முன்னாள் ஆளுநர்கள் லயன் துளசிங்கம், லயன் இரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச கண்புரை பரிசோதனை முகாமை துவக்கி வைத்தனர்.
பின்னர் மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கண்புரை பரிசோதனை செய்து கண்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கி கண் சொட்டு மருந்தினை வழங்கினர்.
இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் அருணாச்சலம், உதயகுமார், நந்தகுமார், ராஜி, சீனிவாசன், ராதாகிருஷ்ணன், வடிவேல், ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment