மாதவரம் தொகுதி புழல் அடுத்த கதிர்வேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன், நாகாத்தம்மன் ஆலயத்தில் 21-ம் ஆண்டு சித்திரை திருவிழா மறைந்த முன்னாள் புழல் ஒன்றிய குழு பெருந்தலைவரும் ஆலய தர்மகர்தாவான பர்ணபாஸ், முன்னாள் முன்னாள் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வதனாபர்ணபாஸ் குடும்பத்தினர்கள் சென்னை மாநகராட்சி 23-வது மாமன்ற உறுப்பினர் ராஜன்பர்ணபாஸ், 31-வது மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு மற்றும் பிரேமலதா ராஜன், தர்மலிங்கம், பாபு, கர்ணன், சவிதாகர்ணன் ஆகியோர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பந்தக்கால், காப்புக்கட்டுதல், பூங்கரகம் எடுத்தல், கணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரகம் ஹோமம் கலசநீர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடைபெற்றது.இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினர். இதில் ஆலய நிர்வாகிகள், சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment