பாலவாக்கம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் பாராட்டு விழா.!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் அருகே இந்திரா நகர் பகுதியில் இயங்கிவரும் லட்சுமி வித்யாலயா பள்ளியில் பாலவாக்கம் அன்னை தெரேசாநகரை சேர்ந்த M.யாமினி என்பவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும் தமிழக அளவில் மூன்றாவது விமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இம்மாணவிக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் ஆணைப்படி மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் அறிவுறுத்தலின்படி மாவட்டச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் பாலவாக்கம் நிர்வாகிகள் நேரில்சென்று பட்டாசுவெடித்து சால்வை அணிவித்து நினைவுபரிசு வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் T.V.K.கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பன்னீர்செல்வம்

Comments
Post a Comment