தூத்துக்குடி மாநகராட்சி முத்து நகர் கடற்கரை பூங்காவில் எல்.இ.டி திரை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் .
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற்று வரும் எல்.இ.டி திரை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் , பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல் ராஜ் , மாநகர மீனவரணி அமைப்பாளர் .டேனி கழக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.
செய்தியாளர் அ. ரவி

Comments
Post a Comment