திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையதில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் படி திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு முன்னிலையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈகுவார்பாளையம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.எம் சிவக்குமார் ஏற்பாட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் குடிநீர் பந்தலையும் திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி, பழ வகைகள் ,மோர்,வெள்ளரி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.எம்.எஸ் சிவக்குமார் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன் ஆரம்பாக்கம் ஜெ சுரேஷ் மாநில மீனவர் அணி துணை செயலாளர் தகவல் தொழில்நுட்பு பிரிவு ராஜா, மற்றும் ஆரோன்,சிரஞ்சீவி,அசோக்குமார்,பாபு,ராஜா,அருண்,கார்த்திக்,சிவா,அரிபாபு,யுவராஜ்,அனிபா,இமான்,நேதாஜி,நந்தகுமார்,ரவிசந்திரன்,ரஞ்சித் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment