தஞ்சாவூர் கொண்டிராஜ பாளையத்தில் அமைந்துள்ள கீழ சிங்கர் என அனைவராலும் அழைக்கப்படும்,ஸ்ரீ கமலவள்ளி தாயார் ஸ்மேத ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் யோக நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 22/5/2024 புதன்கிழமையன்று, காலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் சரி மஹாஸதர்சன ஸ்ரீ லட்சுமி நரசிம்ம மகாலட்சுமி ஹோமமும், காலை,9:00 மணிக்கு மேல் 10 -30 மணிக்குள், விசேஷ திருமஞ்சனம் ஆராதனையும், 10:30 மணிக்கு மேல் நரசிம்ம ஜெயந்தி விழாவும் நடைபெற்றது. கடம் புறப்பாடுகோயில் வளாகத்தின் உள்ளே சுற்றி வந்து, அதன் பின்பாக மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்மிக லிமர்சையாக நடைபெற்றது. இந்தநரசிம்ம ஜெயந்தி விழாவில் பக்த கோடிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு, ஸ்ரீ யோக நரசிம்மரின் அருளை பெற்றனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும், சுவாமி பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
நரசிம்ம ஜெயந்தி விழாவின் தொடர்ச்சியாக, 23.5.2024 வியாழக்கிழமை காலை,9:00 மணிக்கு சிறப்பு சங்கல்பம், சுவாமி புறப்பாடும் நடைபெற்றது, இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளை சுவாதி திருமஞ்சன கமிட்டி நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்கின்றனர். சுவாமி புறப்பாடு நடந்த பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment