விடுதலை சிறுத்தைகள் கட்சியின்நிறுவனரும், தலைவருமான, எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில், தஞ்சையை சேர்ந்த ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தேசிய இயக்குனர் டாக்டர். பிரனேஷ் இன்பென்ட் ராஜ் (தலித் அல்லாதவர்) விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கதே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலமான வேளச்சேரியில் உள்ள, தலைவரின் இல்லத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையிலும், தஞ்சை மைய மாவட்ட செயலாளர் கோ. ஜெய்சங்கர் முன்னிலையிலும் ஐ .நா. மனித உரிமை அமைப்பின் தேசிய இயக்குனர் டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் (தலித் அல்லாதவர்) கடந்த 25- ம் தேதி தன்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அப்போது அவருக்கு தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சால்வை அணிவித்து அவரைவாழ்த்தி வரவேற்றார். நடைபெற்றஇந்த நிகழ்வின்போது, தஞ்சை மாநகர செயலாளர் க.தமிழ்முதல்வன். அ.யோகராஜ் மாவட்ட அமைப்பாளர் தொ.வி.மு./ டி.என்.சி.எஸ்.சி. தொழிற்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர். போராளி என்கின்ற பசுபதி, தஞ்சை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் விளார் பாஸ்கர், திருவோனம் ஒன்றிய துணைச் செயலாளர் பாபு, கியூபா மற்றும் பலர் திரளாககலந்து கொணடு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment