சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம். மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் பத்ரகாளி முத்து தொழிற்சங்க செயலாளர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் விழாவிற்கு சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் திரு எர்ணாவூர் நாராயணன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும். மேலும் இவ்விழாவில் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்க வேண்டும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
செய்தியாளர் அ ரவி

Comments
Post a Comment