செங்கம் அடுத்து பக்கிரிபாளையத்தில் இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் பார்மசி கல்லூரியில் மற்றும் சென்னை அப்போலோ பார்மசி இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட மாணவர்களில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவ மாணவியருக்கும் பணி நியமன ஆணையை திருவண்ணாமலை மாவட்ட மருத்துவர் நல பணி இயக்குனர் மலர்விழி பணி நியமன ஆணையை வழங்கினார். பணிகள் சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் மாணவர்களுக்கு பணி இடங்கள் கிடைக்கப்பெற்றது
இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ந.கோபி தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் பழனிவேல் அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர்கள் அறவாழி, ஜெயராமன், குமரன் கல்லூரியின் பொருளாளர் எம்.ஆர்.டி.குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ராஜா யுவராணி வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் செல்வகுமார்

Comments
Post a Comment