சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை தண்டனை மகளிர் என மூன்று பிரிவுகளில் சுமார் 4000 மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைதிகள் சிறைக்குள் இருந்தாலும் மறைத்து வைத்து கஞ்சா செல்போன் பயன்படுத்துவது தொடக்கதியாகி வரும் நிலையில், சிறைக்குள் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா செல்போன் பயன்படுத்துவது தொடர் கதையாகி விட்டது. இதனை தடுக்க சிறை காவலர்கள் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணை சிறையில் சிறை காவலர்கள் சோதனையில் ஈடுபட்ட போது கார்த்திக் என்கிற யூடியூப் கார்த்திக் என்ற கைதியை சோதனை செய்ததில் அவரது இடுப்பில் லுங்கியில் பதுக்கி வைத்திருந்த செல்போன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்து சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து யூடியூப் கார்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment