செங்குன்றம் வட்டார பளுதூக்கும் தொழிலாளர் சங்கம் (AITUC) சார்பில் மே தின விழா செங்குன்றம் சங்க அலுவலகத்தில் சங்கச் செயலாளர் கே.போஸ் தலைமையில் நடைபெற்றது.|சங்கத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில துணைத்தலைவருமான ஏ.எஸ். கண்ணன் சங்க கொடியை ஏற்றி வைத்து 500க்கும் மேற்பட்டோருக்கு காலை சிற்றுண்டியை வழங்கினார். சங்க பொருளாளர் ஆர்.சந்திரன் வரவேற்புரையாற்றினார். துணைத்தலைவர்கள் ஐ.செல்லதுரை, ஏ.ஐசக் ரகுபதி, துணைச் செயலாளர்கள் ஜெ.சேசுராஜ், அ.பாக்கியராஜ் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 7இ பாஸ்கர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தோழர்கள் தொழிலாளர்கள் என திரளாக கலந்துகொண்டனர். வசூலாளர் டி.கருப்பையா நன்றி கூறினார்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment