செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூரில் உள்ள புனித புத்தர் ஆலயத்தில் இந்தோ பர்மா புத்தர் ஆலயம் மற்றும் கலாச்சாரம் சார்பில் புனித புத்தர் பூர்ணிமா விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிக்குக்கள் கலந்துகொண்டு பௌத்த கொடியுடன் பஞ்சசீலம் கொள்கைகள் ஏற்றப்பட்டு புனித புத்தர்க்கு பூர்ணிமா சிறப்பு பூஜைகள் செய்து பௌத்த வேதங்களை பக்தர்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னதாக பெண்கள் சீர்வரிசை தட்டுடன் ஆலய போதி மரத்தினை சுற்றி வந்து மரத்திற்கு நீர் ஊற்றி புத்தரை வழிப்பட்டனர்.
இதில் இந்தோ பர்மா புத்தர் கோயில் நிர்வாகிகள் தலைவர் சேகர், செயலாளர் குமார், பொருலாளர் பாஸ்கர், துணைத்தலைவர் விஸ்வநாதன், துணை செயலாளர் சண்முகம் மற்றும் செங்குன்றம், பாடியநல்லூர் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு புத்தரை வழிப்பட்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment