திருவள்ளூர் மாவட்டம் ஆந்திரா எல்லையான ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்ட பள்ளியில் ஸ்ரீ பள்ளி கொண்டேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ சர்வமங்களா உடனான பிரதோஷ பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது
பிரதோஷத்தையொட்டி, ஸ்ரீ நந்தீஸ்வர சுவாமிக்கும், ஸ்ரீ வால்மீகேஸ்வர சுவாமிக்கும் ஒரே நேரத்தில் ப்ரதோஷ பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. திங்கட்கிழமையான நேற்று ஆலயத்தில் சுவாமி அம்பாளுக்கு ருத்ரஹோமம், ருத்ராபிஷேகம், மஹா அபிஷேகம் நடைபெற்றது.

இந்த பிரதோஷ பூஜைக்கு ப்ரசாத உபயதார்பாரத பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் பெயரில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் இருவர் கலந்து கொண்டு பிரசாதம் வழங்கினர்அவர்களுக்கு கோவில் முறைப்படி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலய செயல் அலுவலர்,ஆலய சேர்மேன், அர்ச்சகர்கள் மற்றும் சிப்பந்திகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் துரை பன்னீர் செல்வம்
Comments
Post a Comment