சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஒன்றிய அலுவலகம் அருகில் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே. கர்ணாகரன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக மோர், தர்பூசணி, தண்ணீர், வெள்ளரிக்காய் மற்றும் பனை ஓலை விசிறிகளை வழங்கினார்.
இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் அ.காசிம் முகம்மது, துணைச் செயலாளர்கள் கே.எம்.துரைவேல், ப.சீனிவாசன், கி.வீரம்மாள், பொருளாளர் செ.அரசு, மாவட்ட பிரதிநிதிகள் இரா.விஜயன், பா.சேகர், பொன்.கோதண்டன், விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சன்.முனியாண்டி, இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் நா.பரசுராமன், ஒன்றியக் கவுன்சிலர்கள் சந்திரா வாசுதேவன், ருக்மணி ரவிச்சந்திரன், மாலதி மகேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை, இளைஞரணி, மகளிரணி அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment