திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேட்டில் எழுந்தருளி உள்ள பைரவர் திருக்கோவிலின் சித்திரை கத்திரி திருவிழா மிகவும் விமர்சியாக கொண்டாடப் பட்டது
ஆண்டு தோறும் இம்மாதத்தில் இந்த பைரவர் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டும் நேற்று திருவிழா காலையில் துவங்கி இரவு முழுவதும் பலவகையான அபிஷேகங்கள் பூஜைகளோடு நடைபெற்று இரவு பைரவரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு வான வேடிக்கை பட்டாசுகள் மற்றும் கிராமிய தாரைதப்பட்டை மேளதாளங்களோடு வீதி உலா வந்தது பக்தர்கள் அனைவரும் குடும்பமாக வந்து தேங்காய் உடைத்து கர்பூரம் தீபம்ஏற்றி வழிபட்டுசாமி தரிசனம் செய்தனர் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏராளமான மக்கள் சாமிதரிசனம் செய்தனர்
ஊத்துக்கோட்டை தாலுகா செய்தியாளர் துரை பன்னீர்செல்வம்

Comments
Post a Comment