திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், பேரரசு பெரும்பிடுகு முத்தரையருக்கு மாலை அணிவித்து மரியாதை.!
பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1349 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, மாவட்ட கழக செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநகர செயலாளர் மு.மதிவாணன் அவர்களின் தலைமையில் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், துணை மேயர் திவ்யா இவர்களின் முன்னிலையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி ஒன்றிய, நகர, பேரூர், வட்டக் கழக கழகச் செயலாளர் , நிர்வாகிகள், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர்கள், மாவட்ட - மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
செய்தியாளர் சங்கரராமன்

Comments
Post a Comment