Skip to main content

கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த இல்லத்தை, ஆவணத்துறையின் இயக்குனர் பார்வையிட்டார்.

மத்திய அரசின் தேசிய ஆவணத்துறையின் பொது இயக்குனர், அருன் சிங்கால் இ.ஆ.ப,  துணை இயக்குனர்  தேவேந்திர சர்மா, தென் மண்டல இயக்குனர் முருகேசன் (பாண்டிச்சேரி) உள்ளிட்ட உயர்நிலைக் குழு நேற்று கும்பகோணம், சாரங்கபாணி தெருவில் உள்ள கணிதமேதை ராமானுஜன் வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து,அங்கிருந்த அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தார்கள். மேலும் அவர் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட்டு நன்றாக  பராமரிப்பதற்காகப் பாராட்டு தெரிவித்தனர்,  அவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பேராசிரியர் சுகுமாரன், திரு. காரத்தி,  முருகானந்தம், பேரா. நடராஜன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கணிதமேதை ராமானுஜம் பயின்ற கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார்கள். 

அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், பழைய மாணவர் சங்கத்தின் செயலர் சிவகுமார், மோகன்,  மற்றும்ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.பள்ளி வளாகத்தில் இருந்த கணிதமேதை ராமானுஜன் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்பித்தார் கள்.. பின்னர் ராமானுஜன் பயின்ற வகுப்பறைகளையும், பள்ளியில் இருந்த அவருடைய புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார்.  ராமானுஜன் கல்வி பயின்றதற்கான சான்றுகளையும், அவருக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை பற்றிய  ஆவணங்களையும், தலைமையாசிரியர் வழங்கினார். அடுத்து கணிதமேதை ராமானுஜம் பயின்ற கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு வருகை தந்தார். அவரை கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, தாசில்தார் வெங்கடேஸ்வரன், கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் தங்கராஜ், ஜெயங்கொண்டம் கல்லூரி முதல்வர் முனைவர் இரமேஷ், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் வரவேற்றனர்.   கல்லூரி வளகாதிலிருந்த ராமானுஜன் சிலைக்கு மாலையிட்டு,  மரக்கன்றையும் நட்டார். பேராசிரியர்கள் ராமானுஜன் குறித்த ஆவணங்களை பொது இயக்குனரிடம் காண்பித்தார்கள். மேலும்,கல்லூரியில் உள்ள தொன்மையான கட்டடத்தில் ராமானுஜன் பற்றிய கண்காட்சி சிறப்பாக அமைவதற்கு மத்திய, மாநில  அரசுகள் மூலம் முயற்சிகள் எடுக்க கேட்டுக் கொண்டார்கள். நிறைவாக சாஸ்த்ரா பல்கலைக் கழக  ராமானுஜன் அருங்காட்சியத்திற்கு வருகை தந்தார்கள்.  மக்கள் தொடர்பு அலுவலர்  சீனிவாசன், கணித பேராசிரியர்  நடராஜன் வரவேற்றனர். வளாகத்தில் இருந்த ராமானுஜன் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்த ராமானுஜன் பற்றிய அரிய ஆவணங்கள்,  புகைப்படங்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, ராமானுஜன் பற்றிய மூல ஆவணங்களை வழங்குமாறு, பல்கலைக் கழக நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டார்கள்.  

மத்திய அரசின் தேசிய ஆவணத்துறை இயக்குனர், கும்பகோணத்தில் உள்ள இராமானுஜன் தொடர்புடைய எல்லா இடங்களையும் பார்வையிடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை,  தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியரும், மத்திய அரசின் விஞ்ஞான பிரச்சார ஆலோசனைக் குழு உறுப்பினருமான, பேராசிரியர் முனைவர்,வெ. சுகுமாரன் மற்றும் செ. புதூர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினுடைய தஞ்சை மாவட்டத் தலைவருமான,ச. கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  பொறுப்பாளர்கள்  செந்தில்குமார், ஞானசேகரன்,  தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர், தி. முருகானந்தம் ஆகியோர் செய்து இருந்தனர்.


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...