திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பேரூராட்சிகளின் இணை இயக்குனர் S.ஜெயக்குமார்அவர்களின்வழிகாட்டுதலின்படி ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் P.சதீஷ் அவர்களின் ஆலோசனையின் பேரில் மூன்று இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேரு பஜார் பெரியார் சிலை அருகில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது இந் நிகழ்ச்சியில் துப்புரவு பணியின் மேற்பார்வையாளர் செல்லபதி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர் நரேஷ்குமார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் சமூக ஆர்வலர் திலீப்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.செய்தியாளர் துரை பன்னீர்செல்வம்

Comments
Post a Comment