அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தணிக்க, நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி செங்குன்றம் அருகே தீர்த்தகரையம்பட்டு ஊராட்சி அதிமுக அலுவலகம் எதிரே முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமார மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஆளுயர மாலை, கிரீடம்,சால்வை, அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து ஏழை எளியவருக்கு நீர்மோர், கூல்டிரிங்ஸ் தர்பூசணி, இளநீர், வெள்ளரி, கிருணிபழம் உள்ளிட்ட பழங்களை வழங்கினார்.இதில் புழல் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி கழக செயலாளர் அன்பிற்கரசு, அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் ஜெ. டேவிட்சன், தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன், கிளை செயலாளர்கள் ஏ.செங்குட்டுவன்,கோட்டூர் செல்வராஜ், ஏ.நிலவழகன், இ.மூர்த்தி, வெட்டு பெருமாள், துரைவேல், வழக்கறிஞர் முரளி,சரவணன், வாசுதேவன், பாலவாயல் பாபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பால்ராஜ்,எஸ்.முனுசாமி, மேரி தனபால், ஞானமுத்து, ஏசடியாள்,கலைமணி,நந்தினி, ஒன்றிய நிர்வாகிகள் ஐடி ராஜசேகர், விஸ்வநாதன் மற்றும் அதிமுக ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வேளாங்கண்ணி சரவணன் சாந்தி மூர்த்தி நாகஜோதி வாசுதேவன் வளர்மதி ஈஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட கழக, ஒன்றிய கழக, கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக உறுப்பினர்கள், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் பி.பரத் நன்றியுரை கூறினார்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment