Skip to main content

தஞ்சையில் கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் பணி நிறைவு பாராட்டு விழா.

தஞ்சாவூர் கால்நடை பன்முக மருத்துவமனையில், முதுநிலை கால்நடை மருத்துவ மேற் பார்வையாளராக திறன்படபணியாற்றி பணி ஓய்வு பெறும்,  ஜான் பீட்டர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில், மாலை 5 மணி அளவில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்விற்கு கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குனர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையேற்று நடத்திட, இவ்விழாவில் துணை இயக்குனர்  பாஸ்கரன், உதவி இயக்குனர்கள்: சரவணன், அன்புச் செழியன், ஏஞ்சலா ஆகியோரும், கால்நடை ஆய்வாளர் சங்க, மாநில இணைச் செயலாளர்  தமிழ்வாணன் அவர்களும், கால்நடை உதவி மருத்துவர்களும் திரளான கால்நடை ஆய்வாளர்களும் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற ஜான் பீட்டர் அவர்களை  வாழ்த்தினார்கள். விழா ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ராஜா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியின் நிறைவாக  வழக்கறிஞர் சார்லஸ்  நன்றி கூறினார்.


செய்தியாளர்  வேங்கை குணா  

Comments