திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார் குப்பத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருகோவிலில் சித்திரை பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
12நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் வருகிற எட்டாம் தேதி பச்சைமயில் வாகனமும் பத்தாம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. முருகப்பெருமான் விழா நடைபெறும் 12 நாட்களும் தினம்தோறும் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மா.மாதவன் செயல் அலுவலர் மற்றும் ராஜசேகர் குருக்கள் பரம்பரை அறங்காவலர் மற்றும் திருக்கோவில் அர்ச்சகர்கள் கோவில் நிர்வாகிகள் உபயதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment