தஞ்சை, திருச்சி,நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கான மண்டல அளவிலான பேச்சுப்போட்டி, தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார், செயலாளர் மாநில துணைச் செயலாளர்கள் பரமேஷ் குமார் நரேந்திரன் வெற்றி பெற்ற பொறியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர், துணை மேயர் அஞ்சும் பூபதி ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேசினார், இந்தநிகழ்வில் தஞ்சை மாவட்ட தலைவர் இளங்கோ, அமைப்பாளர் ராம்சேகர், துணை அமைப்பாளர்கள் பொன்.கா.லெனின், மணிரத்தினம்,கவிநாதன் ராஜுவ் பாலையா, தினேஷ், தினகர், சீனிவாசன்,ஆகியோர் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment