சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக, நல்லூர் ஊராட்சி நாகாத்தம்மன் நகர் கிளை செயலாளர் ஆர்.கணேசன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக தண்ணீர் பந்தல் திறப்பு விழா செங்குன்றம் அடுத்த நல்லூர் நாகாத்தம்மன் நகரில் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே. கர்ணாகரன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக மோர், தர்பூசணி, தண்ணீர், கிரேப் ஜூஸ் வழங்கினார்.
இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் அ.காசிம் முகம்மது, மாவட்ட பிரதிநிதி பொன்.கோதண்டன், நல்லூர் ஊராட்சி இளைஞரணி துணை அமைப்பாளர் பாலா, வீர பாண்டி நகர் கிளை பொறுப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை, இளைஞரணி, மகளிரணி அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment