திருப்போரூர் அதிமுக கட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர்பந்தலை இரவோடு இரவாக அப்புறபடுத்திய நெடுஞ்சாலைதுறை..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் இயங்கிவரும் பேரூந்துநிலையம் மேற்கேஅமைந்துள்ள எம்.ஜி.ஆர்.சிலை எதிரே அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் செங்கல்பட்டுகிழக்குமாவட்டம் திருப்போரூ ஒன்றிய கழகம் நகரம் சார்பில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலை நேற்று இரவுஇரவாக எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி நெடுஞ்சாலை துறையினர்கள் அத்துமீறி அகற்றியதாக கூறி அஇஅதிமுக கட்சியினர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து ஓஎம்ஆர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்கள்.
நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் செங்கல்பட்டு கிழக்குமாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் சிவராமன் , செங்கல்பட்டு கிழக்குமாவட்ட இளைஞர் அணிச்செயலாளரும் ,பையனூர் துணைத்தலைவருமான ஆர்.கே.குமார் ,மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் கணேசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள் . நகரச்செயலாளர் ஜி. முத்து அனைவரையும் வரவேற்றார். திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச்செயலாளரும் , தையூர் ஊராட்சி மன்ற தலைவருமான தையூர் எஸ்.குமரவேல் , திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழகச்செயலாளர் திருவிடந்தை குட்டி (எ)நந்தகுமார் ஆகியோர்கள் தலைமை தாங்கி பொதுமக்களுக்கான கோடைகால தண்ணீர் பந்தலை அத்துமீறி அகற்றிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளை கண்டித்து கட்சியினர்களுடன் இணைந்து ஓஎம்ஆர்சாலையில் கட்சிகொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இவர்களுக்கு எதிரே கண்டன கோஷங்களை ஏழுப்பியும் இவர்கள் மீது தமிழக அரசுதுறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டி கோஷமிட்டும் கண்டணஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தி சமாபடுத்தினார். இதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட அஇஅதிமுக கட்சியினர்கள் திருப்போரூர் காவல் உதவிஆய்வாளரிடம் நகரச்செயலாளர் முத்து பெயரில் அத்துமீறி தண்ணீர் பந்தலை அகற்றியும் எம்.ஜி. ஆர்.சிலையில் படிக்கட்டை சேதப்படுத்திய நெடுஞ்சாலை திருப்போரூர் ஏஇ மற்றும் சாலை ஆய்வாளர் மீது உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறி புகார் மனுயளித்துள்ளனர்கள்.
இதனைப்பெற்றுக்கொண்ட போலீசார் உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனகூறியதை தொடர்ந்து போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனர்கள் . இதுகுறித்து கட்சியினர்கள் நெடுஞ்சாலை துறையினர்கள் திரூப்போரூர் முதல் காலவாக்கம் வரை ஓஎம்ஆர் சாலையின் இருபுறங்களிலும் மழைவடிகால்வாய் கட்டுகிறேன் என்ற பெயரில் பெரியஅராஜகத்தில் ஈடுபட்டுவருகின்றனர்கள் .ஓருசிறுவேலையை முடிக்ககூட பலமாதங்களை எடுத்துக்கொள்கின்றனர்கள் .இந்தகால்வாய் எதற்காக கட்டப்படுகிறது என்ன திட்டத்தின்கீழ் கட்டப்படுகிறது இதனால் யாருக்கு என்ன பயன் என்றுஇப்பொழுதுவரை தெரியவில்லை தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருக்கும்பொழுது இவ்வளவ அவசரமாக எங்கள் தண்ணீர் பந்தலை அகற்றி கால்வாய்கட்ட என்னஅவசியம் நெடுஞ்சாலை துறைக்கு வந்தது என்று தெரியவில்லை மேலும் தண்ணீர் பந்தல் அமைத்தே மூன்று நாட்கள் தான் ஆகிறது . இப்பொழுது எடுத்தஉள்ள கால்வாய்பணியினை விரைந்துமுடித்து போக்குவரத்து இடையூறு இல்லாமல் செய்யவேண்டும் இல்லையெனில் மாவட்ட அளவில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்கள் . இக்கண்டன ஆர்பாட்டத்தில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணிச்செயலாளரும் , தண்டலம் ஊராட்சி மன்ற தலைவருமான தண்டலம் எம்.ஆனந்தன் ,
திரூப்போரூர் தெற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளரும் சிறுதாவூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினருமான வழக்கறிஞர் சதீஷ்குமார் , திருப்போரூர்வழக்கறிஞர் தயாநிதி , வழக்கறிஞர் தையூர் மகேஷ் ,வழக்கறிஞர் பண்டிதமேடு முருகன் , திருப்போரூர் பேரூராட்சி கவுன்சிலர்களான சிடிஎஸ்குமரன்அரசு ,மாலதிஇளங்கோவன் ,இள்ளலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதிவீரகவன் , மாவட்ட பிரதிநிதிடிவிமகாலிங்கம் , திருப்போரூர் பன்னீர்செல்வம் , திருப்போரூர் நகரஐடிபிரிவு இணைச்செயலாளர் திருமலைராஜா , 15வதுவார்டு கிளை கழகம் கோபி (எ)அம்முகோமதன் , கண்ணகப்பட்டு சுந்தரம் , தலைமை கழகப்பேச்சாளர் ஆமூர் , மகளிரணி மேரி , செம்பாக்கம் பக்கிரி , தையூர் சங்கர் உள்ளிட்டவர்களுடன் கட்சியினர்கள் தொண்டர்கள் திராளாக கலந்துகொண்டனர்கள் வந்திருந்து கலந்துகொண்ட அனைவருக்கும் திருப்போரூர் நகர கழக துணைச்செயலாளர் வித்யாசரஸ்வதிவிஜி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். திருப்போரூர் பேரூராட்சியில் இரவோடு இரவாக அஇஅதிமுக கட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீபந்தல் அகற்றப்பட்டுள்ளதால் திருப்போரூர் முழுவதும் பரப்பரப்பாக காணப்படுகிறது.
செய்தியாளர் மூர்த்தி


Comments
Post a Comment