திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் உள்ள இருக்கும் தெருவில் உள்ள 40 ஆண்டுகள் மேற்பட்ட பழைய குடிநீர் தேக்க தொட்டி சேதம் அடைந்து விட்டதால் புதிய குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு முதல் கட்டமாக பழைய குடிநீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டது.சுமார் மூன்று மணி நேரம் வேலைகள் நடைபெற்ற பின்னர் முழுமையாக குடிநீர் தேக்க தொட்டி சரிந்தது அப்போது தூசி துகளுடன் பலத்த சத்தத்துடன் கட்டுமானம் கீழே சரிந்து விழுந்தது.
பொதுமக்களுக்கு பாதிப்பு இன்றி குடிநீர் தேக்க தொட்டியினை இடித்தனர் .இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறினர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காவல்துறை பாதுகாப்புடன் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது. செயல் அலுவலர் தாமோதரன், உதவி ஆய்வாளர் முனிரத்தினம் ,துப்புரவு மேற்பார்வாளர் குமார், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment