தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடலுக்குள் இயக்கப்பட்ட சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டு விட்டது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர் இப்பகுதியை சுற்றுலா தளமாக மேம்படுத்தும் பொருட்டு கடலில் உள்ள அரிய வகை உயிரினங்களை பொதுமக்கள் காணும் வகையில் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம் இங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடலில் பவளப்பாறைகள் உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் காண்பதற்காக கண்ணாடி நிலைப்படகு வடிவமைக்கப்பட்டது. இந்த படகு சேவை கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் தொடங்கப்பட்டது.
பயணத்தின் போது மழைத்துளியைப் போல விழும் அயிரை மீன்கள் கூட்டமாக துள்ளி குதிப்பதையும் கரும்பச்சை நிறத்தில் தெரியும் கடல் நீர் கடலுக்குள் பவளப்பாறைகள் கலர் மீன்கள் ஜெல்லி மீன்கள் ஆகியவற்றையும் கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பினர். இந்நிலையில் கண்ணாடி இலை படகை வனத்துறையினர் தூத்துக்குடிக்கு கொண்டு சென்று விட்டனர் இதனால் ஒரு படகு மட்டும் இயக்கப்பட்டு வந்தது இந்தப் படகிலும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் ஓட்டை விழுந்தது இதனால் படகு சேவை முற்றிலும் முடங்கியது படையில் ஏறுவதற்காககடலில் அமைக்கப்பட்ட மரப்பாலம் உடைந்து உள்ளது கரையிலிருந்து இருக்கைகள் ஆகியவை கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிக கன மழையால் சேதமடைந்துவிட்டன .இதனால் இந்த கோடை காலத்தில் தருவைகுளம் கடல் அழகி ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர் என்று பொதுமக்கள் வருத்தப்படுகின்றனர் .
தருவைகுளம் சமூக சார்ந்த சுற்றுலா மையத்தின் தலைவர் அமல் தாசன் என்ற பழம் கூறும் போது தருக குளத்தில் படகு சவாரி தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர் ஆனால் கடந்த ஐந்து மாதங்களாக படகுகளை இயக்க முடியவில்லை கடந்த 30 நாட்களுக்கு முன் புதிய படகை வட துறையினர் கொண்டு வந்துவிட்டது. ஆனால் அதனை இயக்க ஆளில்லை தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப படகு ஓட்டுனருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் .படகு தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் வாகன விருத்தத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளம்பரங்கள் செய்ய வேண்டும் . தரமான சாலைகள் அமைக்க வேண்டும். கடற்கரையில் இருந்து சுமார் 3.5 மைல் தூரத்தில் உள்ள காசி வாரி தீவு வரை படகு சவாரியை நீட்டிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் ரவி

Comments
Post a Comment