Skip to main content

ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் கிராமத்தில் மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது.!

இளைஞர்களின் விளையாட்டுத் திறனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கப்படுத்தி வருகிறார்.  ஓட்டப்பிடாரம் ஒன்றியப் பெருந்தலைவர் ரமேஷ் பெருமிதம் .ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் கிராமத்தில், பேச்சியம்மன், காளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு புதிய பறவை கபடிக் குழு, இளைஞர் மன்றம், ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது.கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த பால்ராஜ் நினைவுக் கபடிக் குழுவிற்கு ரூபாய் பதினைந்தாயிரம் கீழமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்கனி அரிச்சந்திரன் வழங்கினார். முதல்பரிசுக்கான சுழற்கோப்பையினை இளைஞர் மன்றம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை இணைந்து வழங்கினர்.

இரண்டாம் பரிசாக ரூபாய் 12ஆயிரம் சென்னை கோழியின ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பேராசிரியர்  முனைவர் க.சங்கிலிமாடன் வழங்கினார். சுழற்கோப்பையினை அரசு ஒப்பந்ததாரர் அண்ணாதுரை மற்றும் தங்கையா, மாடத்தியம்மாள், சந்திரலேகா நினைவாக பெருமாள்சாமி ஆகியோர் இணைந்து வழங்கினர். இரண்டாம் பரிசினை கப்பிகுளம் புதிய பறவை கபடிக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.மூன்றாம் பரிசு பெற்ற கீழமங்கலம் முத்துக்கனி கபடிக் குழுவிற்கு எட்டாயிரம் ரூபாய் பரிசினை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருண்பாண்டியன் வழங்கினார். மூன்றாம் பரிசுக்கான சுழற்கோப்பையினை ஆசிரியர் க.சுரேஷ்குமார் வழங்கினார்.நான்காவது பரிசாக ரூபாய் எட்டாயிரம் புதிய பறவை பி அணிக்கு புதிய தலைமுறை  நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜெ.பிரபாகர் வழங்கினார். நான்காவது பரிசுக்கான சுழற்கோப்பையினை ஆசிரியர் ஜெயராஜ் நினைவாக உறுமி காட்சி ஊடகம் டிவின்பிஸ் டெக்னாலஜி இயக்குநர் ஜெ.பிரேம்குமார் வழங்கினார்.

ஐந்தாம் இடம் பிடித்த மதி பிரதர்ஸ் துரைசாமிபுரம் அணிக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பா.அசோக்குமார் நான்காயிரம் ரூபாய் பரிசு வழங்கினார். ஐந்தாம் இடத்திற்கான சுழற்கோப்பையினை சிறைக்காவலர் பால்ராஜ் நினைவாக திருச்சி தொழிலதிபர் பா.சந்திரதாசன் வழங்கினார்.ஆறாவது பரிசாக ரூபாய் நான்காயிரம் புத்தனேரி சாமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு சந்தனம் நினைவாக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எஸ்.முனியசாமி வழங்கினார். ஆறாவது பரிசுக்கான சுழற்கோப்பையினை செ.சுந்தர்ராஜ் மற்றும் இ.எஸ்.எச். டெவலப்பர்ஸ் மனோஜ்குமார் இணைந்து  வழங்கினர்.ஏழாவது பரிசு பெற்ற பி.வி.என். கைஸ் அச்சங்குளம் அணிக்கு பாலையா நினைவாக ஆச்சிமசாலா பா.சக்திமுருகன் ரூபாய் நான்காயிரம் பரிசு வழங்கினார். ஏழாவது பரிசுக்கான சுழற்கோப்பையினை சந்தனம் நினைவாக ச.பாலமுருகன் வழங்கினார்.

எட்டாவது பரிசினை தமிழ்நாடு காவல்துறை எம்.பிரபாகரன் வழங்கினார். எட்டாவது பரிசுக்கான சுழற்கோப்பையினை துரைசாமி நினைவாக ஏ.கே.துருவன் வழங்கினார். இதனை கப்பிகுளம் புதிய பறவை சி அணியினர் பெற்றுக் கொண்டனர். சிறந்த ரைடருக்கான பரிசை ஐ.ஓ.சி.ஓட்டுநர் முனியசாமி வழங்கினார். சிறந்த கேட்சருக்கான பரிசை செல்லையா நினைவாக அன்னை கன்ஸ்ட்ரக்சன் செந்தூர்முருகன் வழங்கினார். சிறப்பு பரிசுகளை சுபாஷ், தினேஷ், ராஜா ஆகியோர் வழங்கினார்கள்.பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற கபாடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தை கீழமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்கனி, கொடியன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் அருண்குமார், கப்பிகுளம் கவுன்சிலர் அரிச்சந்திரன், அக்காநாயக்கன்பட்டி கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில்  ஓட்டப்பிடாரம் ஒன்றியப் பெருந்தலைவர் வக்கீல் எல்.ரமேஷ் தொடங்கி வைத்தார். அப்போது, 

“இளைஞர்கள் விளையாட்டின் மீது ஆர்வத்தை அதிகரித்தால் உடல் திறன் மேம்படும், கல்வியிலும் வளர்ச்சி அடைவார்கள். உடற்பயிற்சியும், விளையாட்டும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், வாழ்க்கையில் பல சாதனைகள் படைக்கவும் அவசியமானதாக உள்ளது. விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு விளையாட்டு மைதானம் அமைத்திட விளையாட்டுத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு அரசுப் பணிகளில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆதலால் இளைஞர்கள் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று ஒன்றியப் பெருந்தலைவர் எல்.ரமேஷ் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.ஆசிரியர் தமிழ்ராஜ், ராஜா, மகேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். பாபு நன்றி கூறினார். பசுவந்தனை காவல்துறை ஆய்வாளர் தலைமையில் கபடிப் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 



செய்தியாளர் ரவி  

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...