இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத்தரகர்கள் நலச் சங்கம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மற்றும் மாதவரம், திருவொற்றியூர் தொகுதி நிர்வாக சீரமைப்பு கூட்டம் அகில இந்தியத் தலைவர் டாக்டர் விருகை வி.என். கண்ணன் தலைமையில் செங்குன்றம் காமராஜர் மினி ஹாலில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ஏ.பாலசுப்பிரமணி, மாநிலச் செயலாளர் எஸ்.கே. ராஜா, மாநில அமைப்பு துணைச் செயலாளர் ஜெ.அபுல்ஹஸன், பில்டர்ஸ் அமைப்பு மாநிலச் செயலாளர் வி.எம். நந்தகோபால், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருவள்ளூர் மாவட்டத் தலைவராக ஏ.தங்கமாரியப்பன், செயலாளராக எஸ்.வடிவேல், பொருளாளராக வி.சுதாகர், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பாளராக ஒய்.அஷ்ரப் அலி, துணைத்தலைவர்களாக எம்.பி. பாபு, எஸ்.டி. பாலசுப்பிரமணி, இணைச் செயலாளராக பி.சாந்தி, துணைச் செயலாளராக ஜெ.முருகன், செயற்குழு தலைவராக எஸ்.எம். விவேகானந்தன், செயற்குழு உறுப்பினர்களாக எஸ். துரைலிங்கம், டி.என். சேகர், டி.மணிக்குமார், எஸ்.பாபு, செயற்குழு மகளிர் உறுப்பினர்களாக பிரேமலதா பாலகிருஷ்ணன், எஸ்.கலைச்செல்வி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அகில இந்தியத் தலைவர் அறிவித்தார்.
மாதவரம் தொகுதி தலைவராக எஸ்.கோவிந்தராஜ், செயலாளராக கே.சுரேஷ்பாரதி, பொருளாளராக டி.ஜீவா, மணலி சேக்காடு பகுதி தலைவராக கே.கார்த்திக், செயலாளராக ஏ.சிவக்குமார், பொருளாளராக ஜி.முரளி, துணைத்தலைவராக வி.ஏழுமலை ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமை நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டனர்.இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிலத் தரகர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment