புள்ளி லைன் குப்பாமணிதோப்பு ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் அருகே அதிமுக சார்பில் தண்ணீர்ப்பந்தல் திறப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க செங்குன்றம் அடுத்த புள்ளி லைன் ஊராட்சி குப்பா மணி தோப்பு ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் அருகே அதிமுக சார்பில் நீர், மோர் தண்ணீர்ப்பந்தல் திறப்பு விழா கண்ணதாசன் சங்கரன் ஏற்பாட்டில் புழல் ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராககலந்துகொண்டு புள்ளி லைன் ஊராட்சி ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் அருகே நீர், மோர் தண்ணீர்ப்பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் பொதுமக்கள் தாகம் தீர்க்க மோர், இளநீர், வெள்ளரி, தர்பூசணி, ஐஸ்கிரீம் மற்றும் சுவையான குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் விஜயகுமார், கோபால், கோவிந்தன், செல்வராஜ், முத்துலோகநாதன், மோகன், முரளி, நந்தன், பாரதிபாபு, பொற்செல்வி, மனோகர், லோகேஷ், விஷ்ணு, ராமு, கணபதி, புருஷோத்தமன் உள்ளிட்ட நிர்வாகிகள் , மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment