வல்லம் புதூர் தலித் ஊராட்சி மன்ற தலைவர் சாரதா, கணவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய கோரி கண்டன பேரணி.
வல்லம் புதூர் தலித் ஊராட்சி மன்ற தலைவர் சாரதா அவர்களின் கணவர் பழனிச்சாமி அவர்களை சாதியை சொல்லி திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய கோரி
தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள தலித் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சாதி இந்துக்களால் நடக்கும் வன் கொடுமைகளையும், இழிவுகளையும், தடுத்து நிறுத்த கோரியும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தலித் ஊராட்சி மன்ற தலைவர்களை சுதந்திரமாக செயல்படாமல் தடுக்கும் ஆதிக்க சக்திகளையும், சாதி வெறியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட. ஊராட்சி மன்ற தலைவர் சாரதா கணவர் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து ஒரு தலைப் பட்சமாக நடந்து கொள்ளும் காவல் துறை போக்கினை தடுக்க கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கும் நடை. பயண பேரணி, 2.5.2024 அன்று, காலை,10- மணியளவில், வல்லம் பேருந்து நிலையத்திலிருந்து, தொடங்கி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன் தலைமை தாங்கினார், மேலிட பொறுப்பாளர்,என்.டி. இடிமுரசு, தஞ்சை மைய மாவட்ட செயலாளர்,கோ. ஜெய்சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
நி.உ.மீட்பு.மாநி.து. செயலாளர்,வீரன். வெற்றி வேந்தன் முன்னாள்மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன், மாநிலத் துணைச் செயலாளர், சிவா. தமிழ் நிதி, நாடாளுமன்ற தொகுதி செயலாளர், ந. இளந்தென்றல், வழக்கறிஞர்,சா.கோ. ராஜ்குமார், மைய மாவட்ட துணைச் செயலாளர்,வி.தொ. அ.மா. அமைப்பாளர், க. தமிழ் வளவன், மாவட்டத் துணைச் செயலாளர் ரெ.சி.ஆனந்த், முன்னாள் மாநகர மாவட்ட செயலாளர் தமிழ் முதல்வன், யோகராஜ், மைய மாவட்ட செய்தி தொடர்பாளர்,பவுள். அந்தோணி, வல்லம்பேரூர் நகர செயலாளர், கஜேந்திரன், முன்னாள் நகர செயலாளர் பவுள், ஒன்றிய செயலாளர்கள்: நாகத்தி வினோத், வயலூர்பரத், செந்தில் சிலம்பரசன், இரா.ரமேஷ், செ.அரசு வணங்காமுடி, ஜெயகுமார், இரா. பசுபதி வளவன், துரை. புர்ஹானுதீன், அ. இனியன், செந்தில் வளவன், உள்ளிட்டோறும் தஞ்சை ஒன்றிய பொறுப்பாளர்கள்: விளார். பாஸ்கர், குருங்குளம் முருகானந்தம், முன்னாள் நகரச் செயலாளர் பவுள் மற்றும் இந்நாள், முன்னாள், மாநில,மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment