கும்முடிபூண்டி கரும்பு குப்பம் அருள் மிகு ஸ்ரீ நிவாசா பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்
புதுகும்முடிபூண்டி கரும்பு குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ நிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீமான் சதீசன் ராமானு தாசன் பட்டாச்சாரியார் தலைமையில் யாக கலச பூஜைகளுடன் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கும் ஸ்ரீநிவாசா பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சாமி தரிசனம் செய்தனர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கி கோவில் நிர்வாகத்தினர் சிறப்பித்தனர்.
இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் ஒன்றிய குழு தலைவர் கே.எம். எஸ்.சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாரன், ஒன்றிய கவுன்சிலர்கள்,மதன்மோகன் சீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment