மெய்யூர் கிராமம் விவசாய நிலத்தில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயி குமுறல் நடவடிக்கை எடுக்ககோரி முதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை
மெய்யூர் கிராமம் விவசாய நிலத்தில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயி குமுறல் நடவடிக்கை எடுக்ககோரிமுதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை
திருவள்ளூர்மாவட்டம் பூண்டிஒன்றியம் ஊத்துக்கோட்டை தாலுக்கா மெய்யூர் ஊராட்சியில்மழை நீர் வடிகல் கால்வாயில்ஒட்டுமொத்த கழிவுநீர் கலந்து விவசாய நிலத்தில் சேர்வதால் நிலத்தடி மண் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலமாக விவசாயம் செய்ய முடியாமல்விவசாய குடும்பம் குமுறி வருவதாகவும் சொல்லப்படுகிறது
இதனால் பாதிக்கப்பட்ட எம் சி ராஜா விவசாயி என்ற விவசாய குடும்பம் பலமுறை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும் முதலமைச்சரின் தனி பிரிவுக்கும் புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது இதனால் பாதிப்படைந்த விவசாய குடும்பம் வாழ்வாதாரம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது எனவே தமிழக முதல்வர் அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் போர்க்கால அடிப்படையில் இதன் மீது கவனம் செலுத்தி விவசாய நிலத்தில் கலக்கப்படும் கழிவு நீரை அப்புறப்படுத்தவும் விவசாய நிலங்களை பாதுகாக்கவும் கோரிக்கை வலுத்து வருகிறது கண்டு கொள்வரா??? மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வர் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்பாகஇருந்து வருகிறது
ஊத்துக்கோட்டை தாலுக்கா செய்தியாளர் துரைபன்னீர் செல்வம்

Comments
Post a Comment