திருப்போரூர் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகே திமுக கட்சியின் திருப்போரூர் நகர கழகம் சார்பில் நகரச்செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான காலவாக்கம் மு.தேவராஜ் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை ரிப்பன்வெட்டி திறந்துவைத்து நீர்மோர், தர்பூசணி, இளநீர் வழங்கிய திருப்போரூர் ஒன்றியக்குழுப் பெருந்தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் திரளனாவர்கள் பங்கேற்பு.!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி அருகே திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் காஞ்சிவடக்கு மாவட்டம் திருப்போரூர் பேரூர் நகர கழகம் சார்பில் கோடைகாலத்தையொட்டி பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்போரூர் நகர கழகச்செயலாளரும் , பேரூராட்சி மன்ற தலைவருமான காலவாக்கம் மு.தேவராஜ் தலைமை தாங்கினார் . நகர கழக அவைத்தலைவர் பலராமன் முன்னிலை வகித்தார் . திருப்போரூர் நகர கழக துணைச்செயலாளரும் பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான பரசுராமன் அனைவரையும் வரவேற்றார் .
சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச்செயலாளரும் , ஒன்றியக்குழுப்பெருந்தலைவருமான எஸ்.ஆர்.எல் . இதயவர்மன் கலந்துகொண்டு தண்ணீர்பந்தலை ரிப்பன்வெட்டி திறந்துவைத்து பொதுமக்கள் ,பாதசாரிகள் ,போக்குவரத்து பயணிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், சாலையோவியாபாரிகள் ஆகியோர்களுக்கு நீர்மோர் , இளநீர் ,தர்ப்பூசணிப்பழம் , கூல்டிரிங்ஸ்,குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் மாம்பாக்கம் ஜி.சி.அன்புச்செழியன் , திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக துணைச்செயலாளர் வெண்பேடுஇரமேஷ் , திருப்போரூர் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான கண்ணகப்பட்டு பாலகிருஷ்ணன் , விஜயலட்சுமிசுப்பிரமணி , மீனாகுமாரிசந்திரன் கட்சியினர்களான அஸ்கர்அலி , மோனேஷ் , பந்தல்மகாலிங்கம் , மகளிரணி வாணி , சத்யா , டி.எஸ்.பாலு , செங்குட்டுவன் , கலையரசன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்கள் .இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்போரூர் நகர கழகச்செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான காலவாக்கம் மு.தேவராஜ் கட்சியினர்களை ஒருங்கிணைத்து செய்திருந்தார்.
செய்தியாளர் மூர்த்தி


.jpeg)
Comments
Post a Comment