தமிழ் பல்கலைக்கழகத்தில் 2024-2025 ஆம், கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை, பதிவாளர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். முதல் விண்ணப்பித்தினை ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை வரலாறு பட்டப்படிப்புக்கு,இ. நிர்மலா பெற்றுக் கொண்டார்.
மேலும் வளாக கல்வி மூலம் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு, முதுகலை அறிவியல்,எம்.எஸ். டபுள்யூ,எம்.எப்.ஏ. எம்.பி.ஏ, முதுகலை பட்டயம், மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, www.tamiluniversity.ac. inஎன்ற இணையதளத்தை பார்க்கலாம், என பதிவாளர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் துணைப்பதிவாளர் கோ.பன்னீர் செல்வம், மக்கள் தொடர்பு அலுவலர், இரா.க. முருகன், கண்காணிப்பாளர் தே.ரேவதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment