செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் முதல்நிலை ஊராட்சிபில் தரமான காய்கறி, பழங்கள், மளிகை பொருள்கள், உணவுப் பொருள்களை குறைந்த விலையில் பொதுமக்கள் வாங்குவதற்காக சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற முயற்சி எடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையேற்று வாரச் சந்தையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பிரியதர்ஷினி சரவணன், வார்டு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்கண்ணன், இ.தேவி, என்.வேலு, எம்.ராணி, பி.சுரேஷ், எம்.கமருன்னிசா, ஆர்.லட்சுமணன், கே.வளர்மதி, கே,ராஜேஷ், வி.வசந்தி, ஜெ.சிவகாமி, கே.ராஜேஷ், டி.ஆர். வாணி, கே.ராஜவேலு, ஏ.பிஸ்மில்லா, ஊராட்சி செயலாளர் கே.ஆர்.சுரேஷ், போக்குவரத்து உதவி ’ஆய்வாளர் சரவணன், இயற்கை பாதுகாப்புக் குழு மாநில அமைப்பாளர் காஜா இப்ராஹீம்,மாநில தலைவர் இ.மாரியப்பன், புள்ளிலைன் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கே.மாதவன், எத்திராஜ் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திறப்பு விழா அன்று வாரச் சந்தைக்கு வருகை தந்த அனைவருக்கும் ப்ரஷான சிறு கீரை, முருங்கைக் கீரை, தண்டுக் கீரை உள்ளிட்ட பல்வேறு வகையான கீரைகளும், பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் வாங்கிச் செல்வதற்கு பையும் இலவசமாக வழங்கப்பட்டது.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment