பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக தண்ணீர் பந்தல் திறப்பு விழா செங்குன்றம் அடுத்தசோழவரம் பேருந்து நிலையம் அருகே சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே. கர்ணாகரன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர், தர்பூசணி, தண்ணீர், முலாம் பழங்களை வழங்கினார்.
இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் அ.காசிம் முகம்மது, துணைச் செயலாளர்கள் கே.எம்.துரைவேல், ப.சீனிவாசன், கி.வீரம்மாள், பொருளாளர் செ.அரசு, மாவட்ட பிரதிநிதிகள் இரா.விஜயன், பா.சேகர், பொன்.கோதண்டன், ஒன்றிய கவுன்சிலர் சுகவேணி முருகன், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பி.வி. எத்திராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை, இளைஞரணி, மகளிரணி அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment