ஊத்துக்கோட்டையில் கலிங்க ரெட்டியார் ஆறுமுத்து பங்காளிகள் அமைப்பு நடத்தும் ஸ்ரீபெரியாண்டவர் சித்திரை கத்திரி பாலபூஜை விழா
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கலிங்க ரெட்டியார் ஆறுமுத்து பங்காளிகள் அமைப்பு நடத்தும் சித்திரை கத்தரி பால பூஜை விழா சிறப்புடன் நடைபெற்றது
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்ரீ பெரியாண்டவர்க்கு படையல் மற்றும் பழ வகை தட்டுக்களுடன் மேள தாளங்களுடன் வான வேடிக்கை பட்டாசுகள் வெடித்து பெரியாண்டவர் வேடம் அணிந்து ரெட்டியார் சாலை செட்டியார் சாலை வழியாக கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளி அருகில் உள்ள மிகபழமைவாழ்ந்த ஸ்ரீ பெரியாண்டவர் கோயில் வந்து அடைந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது கலிங்க ரெட்டியார் ஆறுமுத்து பங்காளிகள் குடும்பம் குடும்பமாக சாமி தரிசனம் செய்தனர் பின்னர் அனைவருக்கும் காலை உணவு வழங்க பட்டது இந்நிகழ்ச்சியினை கலிங்க ரெட்டியார் ஆறுமுத்து பங்காளிகள் அமைப்பு ஒருங்கிணைத்தனர்
செய்தியாளர் பன்னீர்செல்வம்

Comments
Post a Comment