தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் புழல் பகுதி காங்கிரஸ் சார்பில் புழல் காவாங்கரை பஸ் நிறுத்தம் அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா புழல் பகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் வழக்கறிஞர் புழல் எம்.தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் லயன் ஆர்.எம்.தாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, முலாம் பழம், கூல் டிரிங்ஸ் வழங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் புழல் குபேந்திரன், ஆர்டிஐ மாநில ஒருங்கிணைப்பாளர் கிரி, மாவட்ட செயலாளர் மதிவாணன், வழக்கறிஞர் ஏ.மதன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் புழல் எம்.ஜெயசீலன், மாவட்ட துணைத் அச்சுதன், பலராமன், வட்டாரத் தலைவர் மூத்த தலைவர் பாபு, எஸ்.தண்டபாணி, எஸ்.பிரதீப், எம்.தனசேகர், மணிகண்டன், ராகுல் காந்தி, புழல் நாகராஜ், பாடியநல்லூர் வட்டாரத் தலைவர் ரஜினி உள்ளிட்ட மாநில, மாவட்ட, பகுதி, வட்ட மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment