நாகை வெளிப்பாளையம் பகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கோடை வெப்பத்தில் செல்லும் பொதுமக்கள் பயனடையும் வகையில் நீர்மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நீர் மோர் பந்தலை திறந்துவைத்து உழைக்கும் கூலி தொழிலாளர்களுக்கு நுங்கு, தர்பூசணி, இளநீர் , வெள்ளரி, நீர்மோர் வழங்கினார். தொடர்ந்து வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுகவினர் பழச்சாறு உள்ளிட்டவைகளை வழங்கினர். நாகையில் தொழிலாளர் தினமான இன்று உழைக்கும் மக்களை கௌரவிக்கும் வகையில் நீர்மோர் வழங்கி உற்சாக படுத்திய திமுகவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
செய்தியாளர் கீதம்லெனின்

Comments
Post a Comment