திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காமராஜர் தனியார் பள்ளி ஓட்டிய சாலையில் உள்ள மின் கம்பத்தின் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மின் கம்பம் சேதமாகி கீழே விழும் நிலையில் ஆபத்தான நிலை ஏற்பட்டதை தொடர்ந்து
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெரும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாஜக ஊடகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மின் கம்பத்தை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர் மின் கம்பம் சேதமானதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் உயிர் தப்பினர். மின் கம்பத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது பின்னர் மின்கம்பம் சீரமைக்கப்பட்டு மின்வினியோகம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment