தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க 40-வது ஆண்டு துவக்க தினவிழா, ஒரத்தநாடு ஒன்றியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி துணை தலைவர், என்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் கலா அவர்கள் முன்னிலைஏற்க, மாவட்ட செயலாளர், தி. இரவிச்சந்திரன் சங்க கொடியை ஏற்றினார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர், தம்பியா கலந்து கொண்டார். இதில் முன்னணி ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். இதேபோன்று அம்மாபேட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் கண்ணம்மாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர், S. கருணாநிதி முன்னிலையில் மாவட்ட செயலாளர், தி.இரவிச்சந்திரன் சங்க கொடியை ஏற்றினார்.
இதில் முன்னணி ஊழியர்கள் மற்றும் பலர்கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக பொருளார் உஷா அனைவருக்கும் இனிப்பு வழங்க நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது. திருவிடைமருதூர் ஒன்றியத்தில்,ஒன்றிய தலைவர் மணிமேகலை தலைமையில், மாவட்டச் செயலாளர், தி.இரவிச்சந்திரன் சங்க கொடியை ஏற்றினார்.இதில் முன்னணி நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment