முன்னாள் மாவட்ட பிரதிநிதியும் புழல் ஒன்றிய இணைச் செயலாளரும் காலஞ்சென்ற விளாங்காடுபாக்கம் ஜி.பெருமாள் மனைவி பெ.மகாதேவி மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி, திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சி புழல் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் தலைமையில் விளாங்காடுபாக்கம் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதில் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன்முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் பி.தஷ்ணாமூர்த்தி, பி.செல்வக்குமார், பி.கௌதமன், பி.பரிமளச் செல்வம், பி.உதயகுமார், பி.எழிலன், பி.கபிலன், இ.விக்னேஷ்வரன், டி.தீபன் வர்மன், டி.சித்தார்த், எஸ்.தனுஷ், எஸ்.ரோகேஷ், ஜி.கோகுல் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் திரளாக கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment