செங்குன்றம் அருகே பம்மதுகுளம் ஊராட்சி அன்னை இந்திரா நகரில் வி3 கிரிக்கெட் அகாடமி விளையாட்டு திடலில் வி3 கிரிக்கெட் அகாடமி சார்பில் பூஸ்ட்கேம்ப் மாநிலத்திற்கிடையேயான கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரோஷன்குமார் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஆந்திரமாநில பூஸ்ட்கேம்ப் கிரிக்கெட் ஒருங்கிணைப்பாளர் வினோத், கிரிக்கெட் பயிற்சியாளர்கள் பிரபு, அப்துல்கபூர், டாக்டர் ராஜராஜேஷ்வர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து 100-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்தனர். இதில் வி3 கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment