வல்லம் நகர நாயுடுகள் நலச்சங்கம் சார்பாக, யுகாதி விழா (தெலுங்கு வருடப்பிறப்பு) வல்லம் நல்ல தண்ணீர் கிணறு ரோடு, சுகந்த திருமண மண்டபத்தில், 28.4.2024அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வு காலை 10 மணியளவில், குத்துவிளக்கேற்றி தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், நடனம், பேச்சுப்போட்டி, கவிதை, ஓவியம், போன்ற நிகழ்ச்சிகளும், ஜாதக பரிவர்த்தனையும்,75- வயதுக்கு மேற்பட்ட தம்பதியரை கெளரவித்து அவர்களிடம் அனைவரும் ஆசிர்வாதம் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களான: தஞ்சாவூர் மாவட்ட நாயுடு பெருமக்கள் நலச்சங்க தலைவர், ஆர்.எஸ். சீதாராமன் நாயுடு, பொருளாளர் ஆர்.கே. பாஸ்கர், செயலாளர்,எல். ராஜமகேந்திரன், தமிழ்நாடு நாயுடு மக்கள் பேரவை நிறுவனர்,கே. செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்ட நாயுடு பெருமக்கள் நல சங்கத்தின் தலைவர், வி.கே. சுந்தரராஜன் ஆகியோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது, சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது,10, 12-ம் வகுப்பில் முறையே, 400, 500-க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டப்பட்டது. வல்லம் நகர தலைவர்,ஏ.ஆர். மணிவண்ணன், செயலாளர்,ஜெ. ராஜ்குமார், பொருளாளர்,ஆர். ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை நிர்வாக குழு உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் குணசீலன்

Comments
Post a Comment