முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலை யொட்டி, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில், தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து, மௌன அஞ்சலி பேரணியாக புறப்பட்டு, தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலை அருகே மௌன அஞ்சலி முடிவுற்றது. நடைபெற்ற மௌன அஞ்சலி பேரணிக்கு, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி ஜி இராஜேந்திரன் தலைமை தாங்கினார், முன்னாள் மாவட்ட தலைவர், நாஞ்சி.கி.வரதராஜன், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர்,பொறியாளர்,ஜேம்ஸ், மானிடர் செயற்குழு உறுப்பினர்,வயலூர் இராமநாதன், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள்: கரந்தை கண்ணன், செந்தில் சிவகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பழனியப்பன்,வழக்கறிஞர் ஜான்சன்,சிபிஐ மாவட்ட செயலாளர் முத்து உத்தரவாதி, சிபிஎம்நகர செயலாளர் வடிவேலன், கோட்டை தலைவர் மகேந்திரன், தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட தலைவர் திருஞானம், தஞ்சை மாநகர மாவட்ட மகளிர் அணி சேவா தல தலைவி, தமிழ்ச்செல்வி, கோமதி, தஞ்சை வடக்கு மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் அருண் சுபாஷ், மாதா கோட்டை சூசை மாணிக்கம், விவசாய பிரிவு சீர்.தங்கராசு, கக்கரை சுகுமார்,மாரியம்மன் கோவில் குமாரசாமி, மாரியம்மன் கோவில் பகுதி செயலாளர் ரவி, பூதலூர் வட்டார காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வன், திருக்காட்டுப்பள்ளி, டிஎஸ். நாகராஜன், மற்றும் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் வட்டாரக்காங்கிரஸ் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் ஏனைய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment