Skip to main content

தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவையின் வணிகர் தின விழா மற்றும் 26-வது ஆண்டு விழா.

தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவையின் வணிகர் தின விழா மற்றும் 26-வது ஆண்டு விழா தஞ்சை அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நிறுவனத் தலைவர், பி.ராஜா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் மாவட்ட செயலாளர்,எம்.ஆர். ரவி வரவேற்புரை ஆற்றினார், மாவட்டத் தலைவர், எம். கணேசன் அவைத்தலைவர்,எஸ்.ஜெயபால், மாவட்ட பொருளாளர் டி ராஜா, நகரத் தலைவர், எச். அப்துல் நசீர், நகரச் செயலாளர், ஜி. பார்த்தசாரதி நகர பொருளாளர்,எ. தொன்போஸ்கோ, துணைத்தலைவர் காசி பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாநகராட்சி மேயர், சண்.இராமநாதன் அவர்களும் ஹோட்டல் உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர்,ஜி. சுப்பிரமணிய சர்மா அவர்களும் சிறப்புரையாற்றினார்  கள், தஞ்சை தொழிலதிபர்கள், என். புருஷோத்தம ராஜா,எம்.அன்பு செல்வன்,வி.கே. திருநாவுக்கரசு, பி.சதீஷ், ஏ.முகமது மசூத், ஜி.கார்த்தி, ஆர்.சூரியகுமார்,எ. அருண்பாண்டியன், பி. பிரபாகரன்,கே.ஜி. வெங்கடேஷ்,பி.எல். கேசவன்,எம்.ஆனந்த், எஸ். பாலசுப்பிரமணியன், என்.முருகேசன் உள்ளிட்டோருக்கு சிறந்த வணிகர் விருது வழங்கப்பட்டது, பல்வேறு கிளைச் சங்கங்களுடைய நிர்வாகிகள் மற்றும் திரளான வணிகப் பெருமக்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். நடைபெற்ற வணிகர் தின விழாவில் தமிழக அரசுக்கு வணிகர்கள் சார்பில் கோரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்|பட்டுள்ளதாவது:

தமிழக அரசு வணிகர் நலவாரியத்தை சீரமைத்து வணிகர்களுக்கு பயன்படுகிற விதத்தில்  மாற்றி அமைக்க வேண்டும். தற்போதுள்ள வணிகர் நலவாரியத்தால் வணிகர்களுக்கு எந்த விதமான பயனும் கிடைப்பதில்லை. எனவே  முதலமைச்சர் அவர்கள் தயவு கூர்ந்து தீ விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் வணிகர்கள் பாதிக்கப்படுகின்ற போது உதவுகின்ற விதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலிளிருந்து 1% -சதவீதத்தை ஒதுக்கி, வணிகர் நலவாரியம் மூலமாக உதவிகள் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்கள் மாவட்ட ஆட்சியர், மாதத்திற்கு ஒருமுறை வணிகர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வணிகர்களுடைய குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டு பல ஆண்டுகாலம் செயல்பட்டு வந்தது. அடுத்து வந்த. ஆட்சிகளில் அவை கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே தமிழக முதல்வர்,மு.க.ஸ்டாலின் அவர்கள்  தந்தையின் வழியில் வணிகர்களுடைய  குறைகேட்பு முகாமை,மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் நடத்திட உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வணிகர்களிடம்  தொழில் வரி வசூலிக்கும் போது தாமத கட்டணமாக 10% சதவீதம் அபராதம் மிதிக்கப்படுகிறது. அபராத தொகையை, 2% சதவீதமாக  குறைத்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுககொள்கிறோம். 

திருச்சி மற்றும் கும்பகோணம் புறவழிச்சாலைகளில் இருளிலும், ஒளிர்கின்ற விதத்தில் ஒயிட் மார்க் கோடுகள் போடாத காரணத்தினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. மக்களை பாதுகாக்கின்ற வகையில் கோடுகள் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டுகிறோம். 

மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கடைகளை வணிகர்கள் ஏலம் எடுக்கின்ற போது கடைப்பிடிக்கின்ற விதிமுறைகளை மாற்றி அமைத்து, தாமதமின்றி வணிகர்களிடம் கடையை ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மின் நுகர்வு கட்டணம் மாதம்தோறும் கணக்கிட்டு அதனடிப்படையில் கட்டணத்தை செலுத்துகின்ற முறையை அரசு அமல்படுத்த வேண்டும் என வேண்டுகிறோம், அவ்வாறு செயல்படுத்துகின்ற போது டேரிப் அடிப்படையிலான மின் கட்டணம் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், குறையும் என்பதால் தமிழக முதல்வர் ஆவணம் செய்ய வேண்டுகிறோம். 

இந்த விழாவில் வணிகர்கள் திரளாக குடும்பத்தோடு கலந்து6 கொண்டார்கள் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...