தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக்கல்வியில் பயிலும் மாணவர்களின்,மே 2024 பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக்கல்வியில் பயிலும் மாணவர்களின்,மே 2024 பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ் பல்கலைக்கழக வளாகக் கல்வியியல்வழியாக இளங்கல்வியியல், கல்வியியல் நிறைஞர், முதுகலை (தமிழ் வரலாறு, நாடகம், இசை, சிற்பம்) முது அறிவியல் (கணிப்பொறி, சுற்றுச்சூழல் அறிவியல்) ஒருங்கிணைந்த முதுகலை(தமிழ், வரலாறு, நாடகம்) முனைவர் பட்டம், பட்டயம்,சான்றிதழ் ஆகிய பட்டப் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு (சுமார்,900-பேர்) மே 2024 பருவத் தேர்வுகள்,2.5.2024 முதல்11.5.2024 வரைநடைபெற்றன. இத்தேர்வுகள் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை விடியிடும் வகையில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளன. தேசிய தர மதிப்பீட்டு குழுவின் விதிகளின்படி ஏழு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிட்டால் அதற்கான சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கு கேட்போம் தமிழ் பல்கலைக்கழக வளாக கல்வியின் வழியாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் ஆறு நாட்களுக்குள்ளாகவே குலத் தலைவர்கள் முன்னிலையில் கேது கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) முனைவர்,பெ. இளையாப் பிள்ளைஅவர்களால், (17.5.2024) வெளியிடப்பட்டன தேர்வு எழுதிய மாணவர்களில்,86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். துணைவேந்தர், பதிவாளர்( பொ) மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்(பொ) ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, தமிழ் மொழிக்கென தொடங்கப்பட்டுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இடிய கிராமப்புற மாணவர்கள் அதிகமாக கல்வி பயின்று வரும் நிலையில், தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுவது சிறப்புக்குரியது, இறுதியாண்டு படித்து நேர்படிப்பிற்குச் செல்லும் மாணவர்களுக்கு இத்தேர்வு முடிவுகள் நல்வாய்ப்பாக அமையும். இதுபோன்று மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் அலுவல் நிலை பணியாளர்கள் ஈடுபடும்போது பல்கலைக்கழகம் மென்மேலும் வளர்ச்சி நிலையினை எட்டும் என்று துணைவேந்தர் அவரது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment